சனி, 23 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 22 நவம்பர் 2022 (08:26 IST)

மோர்பி விபத்துக்கு காரணமானவர்கள் பாஜகவுடன் தொடர்பு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Rahul
குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் மோர்பி என்ற பாலம் உடைந்து பெரும் உயிர்சேதம் ஏற்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த விபத்துக்கு காரணமானவர்கள் பாஜகவுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதால் அவர்கள் எந்தவித தண்டனையும் பெறாமல் தப்பித்து விட்டதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ராஜ்கோட்டில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரத்தில் கூறிய ராகுல் காந்தி மோர்பி தொங்கு பாலத்தில் தொடர்புடையவர்கள் பாஜக மிக நெருக்கமான உறவை கொண்டிருப்பதால்தான் எந்தவித நடவடிக்கை எடுக்க நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறினார்
 
மேலும் விபத்துக்கு காரணமானவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva