1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. T20 Match: West Indies Scored 143 Runs

டி-20 கிரிக்கெட் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் 143 ரன்கள்

வெஸ்ட் இண்டீஸ்
இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 19.4 ஒவர் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் குவித்தது.


 

 
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைப்பெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
 
இன்று இரண்டாவது போட்டி நடைப்பெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதைத்தொடர்ந்து முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 19.4 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் குவித்துள்ளது.
 
இந்தியா சார்பில் அமித் மிஷ்ரா சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அஸ்வின், ஜடேஜா, சமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். புவனேஷ் குமார் 1 விக்கெட் கைப்பற்றினார். 
 
இதையடுத்து இந்திய அணி 144 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது.
About Writer
Abimukatheesh
அடுத்த கட்டுரையில்
தொடரை இழந்தது இந்தியா: இரண்டாவது டி-20 போட்டி மழையால் டிரா