ஆசியக் கோப்பையில் சிறப்பான ஆட்டம்… டி 20 தரவரிசையில் முதலிடத்துக்கு வந்த வீரர்!
பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் ஆசியக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
ஆசியக் கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்று விட்டன. இந்திய அணி வெளியேறி ரசிகர்களை ஏமாற்றியுள்ளது. இந்நிலையில் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வரும் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் டி 20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.
1155 நாட்கள் முதலிடத்தில் இருந்த பாபர் ஆசம்மை அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார். இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் நான்காவது இடத்தில் உள்ளார்.