தொடர்புடைய செய்திகள்
- இந்தியன் 2 படத்தின் முக்கிய அப்டேட்டை பொன்னியின் செல்வன் மேடையில் வெளியிட்ட இயக்குனர் ஷங்கர்!
- ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு 2வது தோல்வி
- 61.11 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- இந்தியா-வங்காளதேசம் இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
- ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி டக் அவுட்
5 ஆயிரமாக நீடித்து வரும் தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 10 ஆயிரமாக இருந்த நிலையில் தற்போது வேகமாக குறைந்து வருகிறது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 5,379 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,44,72,241 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,28,057 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,38,93,590 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 50,594 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
