முதலில் ‘Rivalry’ என சொல்வதை நிறுத்துங்கள்… இந்திய கேப்டன் சூர்யகுமார் நக்கல் பேச்சு!
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்று நடந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டியில், இந்திய அணி மிக எளிதாக வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 171 ரன்கள் அந்த இலக்கை இந்திய அணி எளிதாக எட்டியது. இதன் மூலம் இந்த தொடரில் இரண்டாவது முறையாக இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது.
இந்த போட்டி முடிந்ததும் பேசிய இந்தியக் கேப்டன் சூர்யகுமார் யாதவ் “முதலில் rivalry என சொல்வதை நீங்கள் நிறுத்தவேண்டும். இரு அணிகள் 15 போட்டிகளில் விளையாடி 7-7 என்றோ 8-7 என்றோ முடிவுகள் இருந்தால்தான் அது rivalry ஆகும். ஆனால் போட்டி முடிவுகள் 10-0 என்றோ 10-1 என்றோ இருந்தால் அது எப்படி rivalry ஆகும்” என பாகிஸ்தான் அணியை நக்கல் செய்து பேசியுள்ளார்.
சமீபகாலமாக இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் ஒருதலைபட்சமான முடிவையே எட்டுகின்றன. பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு கடும் போட்டியைக் கொடுப்பதில்லை. 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரு அணிகளும் மோதிய அனைத்துப் போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.