புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 21 செப்டம்பர் 2025 (12:25 IST)

துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எக்ஸ் பக்கத்தில் பாகிஸ்தான் கொடி.. அதிர்ச்சி தகவல்..!

துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எக்ஸ் பக்கத்தில் பாகிஸ்தான் கொடி.. அதிர்ச்சி தகவல்..!
மகாராஷ்டிரா   முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று ஆசிய கோப்பை இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவிருக்கும் நிலையில், ஹேக் செய்யப்பட்ட அவரது பக்கத்தில் பாகிஸ்தான் மற்றும் துருக்கி நாடுகளின் கொடிகள் பதிவிடப்பட்டிருந்தன.
 
இந்த நிகழ்வு குறித்து சைபர் கிரைம் போலீசாருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. ஷிண்டேவின் எக்ஸ் கணக்கை கவனித்துக்கொள்ளும் குழு, சுமார் 30 முதல் 45 நிமிடங்களில் கணக்கை மீட்டெடுத்ததாக ஒரு சைபர் கிரைம் அதிகாரி தெரிவித்தார். 
 
ஹேக் செய்யப்பட்ட பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த படங்கள், சில நிமிடங்கள் மட்டுமே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva