செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 21 செப்டம்பர் 2025 (10:52 IST)

$100000 கொடுத்து H-1B விசா வாங்க வேண்டிய அவசியம் இல்லை.. இந்தியாவுக்கு திரும்புங்கள்.. இளம்பெண்ணின் வைரல் பதிவு..!

$100000 கொடுத்து H-1B விசா வாங்க வேண்டிய அவசியம் இல்லை.. இந்தியாவுக்கு திரும்புங்கள்.. இளம்பெண்ணின் வைரல் பதிவு..!
பெங்களூரை சேர்ந்த ராதிகா அகர்வால் என்ற பெண், தனது அமெரிக்க பயண அனுபவம் குறித்து சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. மூன்று முறை H-1B விசா கிடைக்க தவறிய நிலையில்,  L1 விசா கிடைத்த பிறகும் அவர் ஏன் இந்தியாவிற்கு திரும்பினார் என்பதை அந்த பதிவில் விளக்கினார். 
 
ராதிகா அகர்வால் தனது பதிவில், அமெரிக்காவில் பணிபுரிவதை விட இந்தியாவிற்கு திரும்புவது ஏன் சிறந்தது என்பதற்கான நான்கு முக்கிய காரணங்களை விவரித்துள்ளார்:
 
இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்-அப்
 
தனது பெற்றோருடன் முக்கியமான வாழ்க்கை தருணங்களில் அருகில் இருத்தல்.
 
வெளிநாட்டவராக இல்லாமல், ஒரு வலுவான சமூகத்தின் ஒரு பகுதியாக உணர்தல்.
 
விசா குறித்த கவலை இல்லாமல், பணியில் ரிஸ்க் எடுக்க சுதந்திரம்.
 
அவரது இந்த முடிவு, விசா கட்டுப்பாடுகளால் அமெரிக்காவில் சிக்கித் தவிக்கும் பல இந்தியர்களுக்கு ஒரு நம்பிக்கையை அளித்துள்ளது. குறிப்பாக, "புதிய H-1B அறிவிப்பை பார்த்து குழப்பத்தில் இருப்பவர்களுக்கு, இது இந்தியாவிற்கு திரும்புவதற்கான சரியான சமிக்ஞை" என்று அவர் கூறியுள்ளார்.
 
 
Edited by Siva