வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 11 நவம்பர் 2020 (18:13 IST)

தமிழில் ஒரு சம்பளம்… மலையாளத்துக்கு ஒரு சம்பளம் – நயன்தாராவின் முடிவு!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் சினிமாக்களுக்கு ஒரு சம்பளம் என்றும் மலையாள சினிமாவுக்கு ஒரு சம்பளம் என்று வாங்கி வருகிறாராம்.

நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக பல வருடங்களாக நீடித்து வருகிறார். அவரின் படங்கள் தமிழில் பல கோடி ரூபாய் வரை வசுலித்து வருவதால் அவரின் சம்பளமும் பல கோடிகளில் இருந்து வருகிறது. இந்நிலையில் தனது சொந்த மாநிலமான கேரளாவில் அவரின் சம்பளம் தமிழில் வாங்குவதை விட மிகவும் குறைவு என சொல்லப்படுகிறது.

இதற்கு காரணம் மலையாள சினிமாக்களின் பட்ஜெட்தானாம். மேலும் மலையாள சினிமாக்களுக்கு மிகக்குறைந்த நாட்களே அவர் கால்ஷீட் கொடுக்கிறாராம்.