1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Suresh raina talked about shivam dube bowling

தோனி மட்டும் இதைப் பார்த்திருந்தால் உங்களுக்கு அந்த வாய்ப்பு நிச்சயம்… ஷிவம் துபேக்கு நம்பிக்கை அளித்த ரெய்னா!

இந்தியா
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மொஹாலியில் நேற்று நடந்த முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  இந்திய அணி சார்பாக சிவம் துபே 60 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான அணி 20 ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது நபி 42 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 17.3 ஓவரில்  4 விக்கெட்களை இழந்து  159 ரன்கள் எடுத்து 6  விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் ஷிவம் துபே 2 ஓவர்கள் வீசி 9 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். இதுகுறித்து போட்டி முடிந்த பின்னர் பேசிய சுரேஷ் ரெய்னா “தோனி மட்டும் இந்த போட்டியை பார்த்திருந்தால் ஐபிஎல் தொடரில் உங்களுக்கு மூன்று ஓவர்கள் நிச்சயம்” எனக் கூறினார். அதற்குப் பதிலளித்த ஷிவம் துபே “ரெய்னா அண்ணன் சொல்வதைக் கேட்டுக் கொள்ளுங்கள் தோனி அண்ணா” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
டி 20 கிரிக்கெட்னா அது டிவில்லியர்ஸ்தான்… ஓப்பனாக சொன்ன நியுசி வீரர்!