தோனி சொன்ன ஒரு அட்வைஸ் இதுதான்… அதை பாலோ செய்கிறேன் – பினிஷிங் குறித்து ரிங்கு சிங்!
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மொஹாலியில் நேற்று முதல் டி 20 போட்டி நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான அணி 20 ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது நபி 42 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 17.3 ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 159 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பாக பேட்டிங்கில் ஷிவம் துபே 60 ரன்கள் சேர்த்தார். அதே போல ஆறாவது வீரராக இறங்கி ரிங்கு சிங் 9 பந்துகளில் அதிரடியாக விளையாடி 17 ரன்கள் சேர்த்தார். போட்டிக்கு பின்னர் பினிஷிங் ரோலில் விளையாடுவது குறித்து பேசிய அவர் “நான் பினிஷிங் செய்வது குறித்து எனது குரு தோனியிடம் பேசினேன். அவர் சொன்னது பந்தை பார்த்து அதற்கேற்றார் போல விளையாடு என்பதுதான். அதை செய்து வருகிறேன். ஆறாவது இடத்தில் இறங்கி விளையாடுவது எனக்குப் பழக்கமாகிவிட்டது.
அப்போது எனக்குள் அதிகமாக பேசிக்கொள்வேன். ஏனென்றால் அப்போது அதிக பந்துகளை சந்திக்க முடியாது. அதிக ரன்களையும் அடிக்க முடியாது. அதனை மீண்டும் மீண்டும் எனக்குள் சொல்லிக் கொள்வேன்.” எனக் கூறியுள்ளார்.