ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 12 ஜனவரி 2024 (07:42 IST)

ரி எண்ட்ரி மேட்ச் இப்படி ஆயிடுச்சே… ஷுப்மன் கில்லை கடும் கோபத்தில் திட்டிய ரோஹித் ஷர்மா!

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மொஹாலியில் நேற்று நடந்த முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  இந்திய அணி சார்பாக சிவம் துபே 60 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான அணி 20 ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது நபி 42 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 17.3 ஓவரில்  4 விக்கெட்களை இழந்து  159 ரன்கள் எடுத்து 6  விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களால ஷுப்மன் கில் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் களமிறங்கினர். இதில் முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ரோஹித் ஷர்மா ரன் அவுட் ஆனார். அதற்குக் காரணம் ஷுப்மன் கில்தான் என நினைத்து அவரை கண்டபடி திட்டிவிட்டு அதன் பின்னர் பெவிலியன் திரும்பினார். இது சம்மந்தமான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர். கிட்டத்தட்ட 14 மாதங்களுக்கு பிறகு டி 20 அணியில் ரோஹித் ஷர்மா இடம்பிடித்த நிலையில் அவரின் இந்த இன்னிங்ஸ் டக் அவுட்டில் முடிந்தது ஏமாற்றமானதாக அமைந்தது.