1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 12 ஜனவரி 2024 (09:51 IST)

இந்திய சந்தையில் போக்கோ X6 அறிமுகம்.. என்ன விலை? என்னென்ன சிறப்பு அம்சங்கள்?

இந்தியாவில் போகோ X6 என்ற ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கும் நிலையில் இந்த போன்  இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

சீனாவை சேர்ந்த போகோ நிறுவனம்  2018 ஆம் ஆண்டு தனது முதல் மாடலை அறிமுகம் செய்த நிலையில் அடுத்தடுத்து புது புது மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில் கோகோ X6 என்ற மாடல் தற்போது அறிமுகம் ஆகி உள்ள நிலையில் இந்த போன் 20000 ரூபாய்  விலையில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த ஃபோனில் உள்ள சிறப்பு அம்சங்கள் இதோ:

1. 6.67 இன்ச் OLED டிஸ்ப்ளே

2. ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜெனரேஷன் 2 சிப்செட், ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்

3. 64 + 8 + 2 மெகாபிக்சல் 3 கேமரா

4. 16 மெகாபிக்சல் கொண்டுள்ள செல்பி கேமரா

5. 5100mAh பேட்டரி

6. 67 வாட்ஸ் டர்போ சார்ஜ் வசதி

7. 3 முக்கிய ஆன்ட்ராய்டு அப்டேட்

8. 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் +256ஜிபி ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் என மூன்று வகைகளில் கிடைக்கும்

9. 5ஜி நெட்வொர்க் வசதி உண்டு

10. யுஎஸ்பி டைப்-சி போர்ட்


Edited by Siva