தொடர்புடைய செய்திகள்
- நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!
- சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்: மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு.!
- நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அனிருத் இசைக் கச்சேரி!
- அஸ்வின் வீடு இருக்கும் சாலைக்கு அவரது பெயர்: சென்னை மாநகராட்சி முடிவு..!
- மூத்த குடிமக்களுக்கு பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சை! - டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை!
தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!
சர்வதேசக் கிரிக்கெட் தொடர்களை விட உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான லீக் தொடராக மாறி வருகிறது ஐபிஎல். உலகில் கிரிக்கெட் விளையாடும் (பாகிஸ்தான் தவிர) நாட்டு வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்பதால் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் செல்கிறது.
இந்த தொடரின் ஐகான்களில் ஒருவராக இருக்கிறார், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. கடந்த சில ஆண்டுகளாக தோனி ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்றுதான். அதற்குக் காரணம் தோனிக்கு தற்போது 43 வயதாகிறது. ஆனாலும் அவரை தற்போது சி எஸ் கே அணி அன்கேப்ட் ப்ளேயர் எனும் விதியின் மூலம் தக்கவைத்துள்ளது.
இந்நிலையில் தோனி பற்றி பேசியுள்ள அவரின் சக வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா “அனைவரு தோனியின் பிட்னெஸ் பற்றி பேசுகிறார்கள். ஆனால் அவரின் ஷாட் ஆடும் திறனும், பேட்டின் வேகமும்தான் அவர் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடக் காரணம். அவர் ஐபிஎல் தொடருக்கு ஒரு மாதம் முன்பாகவே சென்னை வந்து தினமும் 3 மணிநேரம் பயிற்சி செய்கிறார். அவர் இன்னும் ஒரு சீசனாவது ஆடிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்