சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்: மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு.!
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று செயல்படும் என சென்னை மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து, மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வுகள், திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று வழக்கம் போல் செயல்படும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி வெளியிட்ட செய்திக் குழுமத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகள், அதாவது அரசு மற்றும் அரசு உதவி பெறும், ஆதிதிராவிட, சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகள், சனிக்கிழமை ஆன இன்று பணி நாளாக செயல்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை பாடத்திட்ட அட்டவணையை பின்பற்றி வகுப்புகளை நடத்துமாறு தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Siva