1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : சனி, 22 மார்ச் 2025 (19:31 IST)

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

ஐபிஎல் போட்டித் தொடர் இன்று தொடங்க இருக்கிறது. முதல் போட்டி பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், சற்றுமுன் டாஸ் போடப்பட்டது.
 
டாஸ் வென்ற பெங்களூரு அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கொல்கத்தா அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்க உள்ளது.
 
இன்றைய முதல் போட்டியில் எந்த அணி வெற்றிபெரும் என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.  பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் தொடர்பான முழு விவரங்கள் தற்போது கிடைத்துள்ளன. அந்த தகவல்கள் இதோ:
 
பெங்களூரு: சால்ட், விராத் கோலி, ரஜத் படிதார், லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருணால் பாண்ட்யா, ரஷிக் தர், சுயாஷ் ஷர்மா, ஹாசில்வுட், யாஷ் தயால்
 
கொல்கத்தா: டீகாக், வெங்கடேஷ் ஐயர், ரஹானே, ரிங்கு சிங்,அங்கிரிஷ், சுனில் நரேன், ரசல், ரமந்தீப் சிங், ஜான்சன், ரானா, வருண் சக்கரவர்த்தி,
 
Edited by Siva