செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 21 ஜூலை 2021 (11:08 IST)

கிரிக்கெட் வர்ணனையில் சாதிய பெருமையா? – சுரேஷ் ரெய்னா பேச்சால் சர்ச்சை!

டிஎன்பிஎல் போட்டி வர்ணனையில் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டிகள் தொடங்கி விருவிருப்பாக நடந்து வருகின்றன. அதில் ஒரு ஆட்டத்தின் வர்ணனையின்போது காணொலி மூலமாக சிஎஸ்கே அணி வீரர் சுரேஷ் ரெய்னா இடம் பெற்றார்.

அப்போது அவரிடம் சென்னை கலாச்சாரத்தை எளிதில் உள்வாங்கி கொண்டது பற்றி கேட்டபோது அவர் தனது சாதி பெயரை சொல்லி தான் அதை சார்ந்தவன் என்பதால் தமிழ் கலாச்சாரத்தை எளிதில் உள்வாங்கி கொண்டதாக கூறினார். வர்ணனையில் சாதிய பெயரை குறிப்பிட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அவர் எந்த உள்நோக்கமும் இன்றி எதார்த்தமாகதான் அப்பெயரை குறிப்பிட்டுள்ளார் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.