செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்துமா இந்தியா?

இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது 
 
இன்று கொழும்பில் நடைபெற இருக்கும் இந்த போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கை அணியுடன் மோத உள்ளது. இந்த போட்டி கடந்த 13ஆம் தேதி தொடங்க இருந்த நிலையில் ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 18ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவின் ஒரு கிரிக்கெட் அணி ஏற்கனவே இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் மற்றொரு அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய முதல் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இன்றைய போட்டி பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது