1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 20 செப்டம்பர் 2018 (19:08 IST)

சூப்பர் 4 சுற்று மற்றும் இறுதி போட்டிக்கான அட்டவணை

இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்கும் 14 - வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில்(துபாயில்) நடந்துவருகிறது.


இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

முதல் லீக் சுற்றில், வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளிடம் தோல்வியை தழுவியதால் இலங்கை தொடரை விட்டு வெளியேறியது. அதேசமயம் இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவிய ஹாங்காங் அணியும் தொடரை விட்டு  பரிதாபமாக வெளியேறியது.

இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகளும் சூப்பர் 4  சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. சூப்பர் 4 சுற்று மற்றும் இறுதி போட்டிக்கான அட்டவணை பின்வருமாறு:

செப்டம்பர் 21:

பாகிஸ்தான் vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி நடைபெறும் இடம் அபுதாபி
இந்தியா vs வங்கதேசம் - போட்டி நடைபெறும் இடம் துபாய்

 
செப்டம்பர் 23:

வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி நடைபெறும் இடம்: அபுதாபி
இந்தியா  vs  பாகிஸ்தான் - போட்டி நடைபெறும் இடம்: துபாய்

 
செப்டம்பர் 25:

ஆஃப்கானிஸ்தான்   vs  இந்தியா -  துபாய்

செப்டம்பர் 26:

வங்கதேசம்  vs  பாகிஸ்தான்  -  ஆஃப்கானிஸ்தான்

செப்டம்பர் 28:

இறுதி போட்டி – துபாய்