புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 20 செப்டம்பர் 2018 (11:56 IST)

ரசிகரை அசிங்கப்படுத்திய விராட் கோலி - குவியும் கண்டனங்கள்

மும்பை விமான நிலையத்தில் விராட் கோலிக்கு, ரசிகர் ஒருவர் கொடுத்த போட்டோ பிரேமை அவர் தனது செக்யூரிட்டியிடம் கொடுத்தது பலரை அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் மும்பை விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
 
அப்போது கோலியின் தீவிர ரசிகர் ஒருவர், அவரை நோக்கி வேகமாக ஓடி வந்து, அவரிடம் நான் உங்கள் தீவிர ரசிகன், உங்களின் மேட்ச் அனைத்தையும் பார்ப்பேன். உங்களின் வெற்றி தொடர வாழ்த்துக்கள் என கூறி ஒரு அழகிய போட்டோ பிரேமை ஆர்வமாக கோலியிடம் கொடுத்தார். அதனை கோலி திறந்து பார்த்துவிட்டு நம்மை பாராட்டுவார் என அந்த ரசிகர் ஆவலாக காத்துக் கொண்டிருந்தார்.
ஆனால் கோலியோ அந்த போட்டோ பிரேமை தனது செக்யூரிட்டியிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார். இதனால் அந்த ரசிகர் மிகவும் வருத்தமடைந்தார். கோலியால் ஒரு ரசிகரின் உணர்வை கூட மதிக்க தெரியாதா என பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.