1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 5 பிப்ரவரி 2026 (12:07 IST)

இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாட மாட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு..!

இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாட மாட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு..!
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 2026 டி20 உலக கோப்பையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் புறக்கணிப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் அதிரடியாக அறிவித்துள்ளார். வங்கதேசத்தில் நிலவும் சூழல் மற்றும் ஐசிசியின் சில முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 
முன்னதாக, வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து முஷ்தஃபிகுர் ரஹ்மான் ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச அணி இந்தியா வர மறுத்தது. 
 
தங்களுக்கு பதிலாக ஸ்காட்லாந்தை ஐசிசி சேர்த்ததை அடுத்து, வங்கதேசத்திற்கு ஆதரவாக பாகிஸ்தான் களமிறங்கியுள்ளது. இது குறித்து பேசிய பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், "நாங்கள் வங்கதேசத்துடன் உறுதியாக நிற்கிறோம். களத்தில் அரசியல் இருப்பதை விரும்பவில்லை, எனவே இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பது சரியான முடிவு" என்று தெரிவித்துள்ளார். 
 
டி20 உலக கோப்பை பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பாகிஸ்தானின் இந்த அறிவிப்பு சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva