ஞாயிறு, 8 பிப்ரவரி 2026
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 6 பிப்ரவரி 2026 (08:09 IST)

மகளிர் ஐபிஎல்.. ஆர்சிபி மீண்டும் சாம்பியன்.. ஸ்மிருதி மந்தனாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

மகளிர் ஐபிஎல்.. ஆர்சிபி மீண்டும் சாம்பியன்.. ஸ்மிருதி மந்தனாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!
மகளிர் ஐபிஎல் தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. 
 
நேற்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு வெறும் 203 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஜமிமா அதிகபட்சமாக 57 ரன்கள் எடுத்தார்.
 
தொடர்ந்து 204 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணிக்குத்தொடக்க வீராங்கனை ஹாரிஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இருப்பினும், கேப்டன் ஸ்மிருதி மந்தனா நிதானமாக விளையாடி 87 ரன்களும், அவருக்கு உறுதுணையாக ஜார்ஜியா 79 ரன்களும் விளாசினர். இறுதியில் 19.4 ஓவர்களில் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது. 
 
இதுவரை நடந்துள்ள நான்கு தொடர்களில் மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் தலா இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்று சமநிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva