வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 14 செப்டம்பர் 2022 (15:29 IST)

“ரெண்டு பேருமே ஆடும் லெவனில் இருக்க வேண்டும்…” கவாஸ்கர் கருத்து

சமீபத்தில் டி 20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணி குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த தொடருக்கான அணிகளின் வீரர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதையடுத்து சமீபத்தில் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்திய அணி 7 பேட்ஸ்மேன்கள் 4 பவுலர்களோடு விளையாடுமா அல்லது 6 பேட்ஸ்மேன்கள் மற்றும் 5 பவுலர்களோடு விளையாடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதனால் அணியில் தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பண்ட் இருவரில் யாருக்காவது ஒருவருக்குதான் இடம் கிடைக்கும் என்ற சூழலில், கவாஸ்கர் இருவரையுமே அணியில் ஆடவைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்திய அணி நான்கு பந்துவீச்சாளர்களோடு விளையாடி ஹர்திக் பாண்ட்யாவை ஐந்தாவது பவுலராக பயன்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

டி 20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி

ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராத் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், சாஹல், அக்சர் பட்டேல், பும்ரா, புவனேஷ்குமார், ஹர்ஷல் பட்டேல், அர்தீப் சிங்