ஸ்மிருதி மந்தனா அதிரடி ஆட்டம்: இங்கிலாந்தை வீழ்த்தியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
ஸ்மிருதி மந்தனா அதிரடி ஆட்டம்: இங்கிலாந்தை வீழ்த்தியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மகளிர் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நிலையில் இந்திய மகளிர் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி உள்ளது
நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது
இதனை அடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
இந்தியாவின் முன்னணி வீராங்கனை ஸ்மிருதி 53 பந்துகளில் 79 ரன்கள் அடித்தார் என்பதும் இதில் 13 பவுண்ட்ரிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவர் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்
இந்த நிலையில் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது