1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Sunil gavaskar talked about captaincy change in Mumbai indians

ரோஹித்தின் பங்களிப்பு குறைந்துவிட்டது… கேப்டன் மாற்றம் குறித்து சுனில் கவாஸ்கர்!

ரோஹித் ஷர்மா
மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார். இது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹர்திக்கை குஜராத்தில் இருந்து ட்ரேட் செய்யும்போதே அவர் தனக்குக் கேப்டன் பதவி வேண்டுமெனக் கேட்டதாகவும், அதற்கு ஒப்புக்கொண்டே மும்பை இந்தியனஸ் அவரை வாங்கியதாகவும் சொல்லப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியான உடனே மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதளப் பக்கங்களை ரசிகர்கள் அன்பாலோ செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த முடிவு அந்த அணிக்குள்ளேயே சலசலப்பை உருவாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த அணியின் முக்கிய வீரர்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் ஹர்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரோஹித் ஷர்மாவும் இதுவரை ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு வாழ்த்துக் கூட சொல்லவில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த முடிவு குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் “கடந்த இரண்டு ஆண்டுகளாக ரோஹித்தின் பேட்டிங் பங்களிப்பும் குறைந்துவிட்டது. அவருக்கு அதிக கேப்டன்சி சுமை இருந்ததால் இது நடந்திருக்கலாம். இந்த விஷயத்தில் நாம் சரி தவறு என்ற விவாதத்துக்குள் செல்ல வேண்டாம். ஏனென்றால் அவர்கள் அணியின் நலனுக்காக ஒரு முடிவை எடுத்துள்ளார்கள்.

ஹர்திக் ஒரு இளம் கேப்டன் என்பதால் அவரால் பெரிய மாற்றம் செய்ய முடியுமெனக் கருதி அவரை கேப்டனாக்கி இருக்கலாம். அவர் இரண்டு முறை குஜராத் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஒருமுறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.  சில நேரங்களில் புதிய சிந்தனைகள் தேவை. அதை மும்பை அணிக்கு அவர் வழங்குவார்” எனக் கூறியுள்ளார். 
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
ட்ராவிஸ் ஹெட்டுக்கு செம க்ராக்கி! ஸ்மித்தை கண்டுக்கல! – பரபரக்கும் ஐபிஎல் மினி ஏலம்!