1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rohith Sharma Is approached by delhi capitals

20 கோடி ரூபாய் சம்பளம் ப்ளஸ் கேப்டன் பதவி… ரோஹித்துக்கு வலைவிரிக்கும் ஐபிஎல் அணி?

ரோஹித் ஷர்மா
இரு தினங்களுக்கு முன்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார். முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு நன்றி தெரிவித்து ஒரு வீடியோவையும் வெளியிட்டது மும்பை இந்தியன்ஸ் அணி. அதே போல சி எஸ் கே அணியும் ரோஹித் ஷர்மாவுக்கு ஒரு வாழ்த்துப் பதிவை வெளியிட்டது.

கடந்த இரண்டு சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக விளையாடவில்லை. அதற்காக மும்பை அணிக்காக 5 முறை கோப்பை வென்று கொடுத்துள்ள ரோஹித் ஷர்மாவை மரியாதை இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் நடத்துவதாக ரசிகர்கள் கொந்தளித்தனர். இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியான உடனே மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதளப் பக்கங்களை ரசிகர்கள் அன்பாலோ செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் ரோஹித் ஷர்மாவை டெல்லி கேப்பிடல்ஸ் அணி தங்கள் அணிக்காக விளையாட வைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி அவர் வரும் பட்சத்தில் அவருக்கு 20 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கவும், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கேப்டன் பொறுப்பு வழங்கவும் தயாராக உள்ளதாக அவரிடம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி ஒருவேளை உண்மையாக பேச்சுவார்த்தை நடந்தால் இதற்கு ரோஹித் ஷர்மா சம்மதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
About Writer
vinoth