1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 16 டிசம்பர் 2023 (22:20 IST)

'சென்னை சூப்பர் கிங்ஸ்' அணிக்கு செல்கிறாரா ஹோஹித் சர்மா? போட்டோ வைரல்

rohit sharma
மும்பை இந்தியன்ஸ் அணியின்  10 ஆண்டுகளாக மும்பை அணிக்கு கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ஹர்த்திக் பாண்ட்யாவை நியமித்துள்ளது அணி நிர்வாகம்.

இதுகுறித்து அந்த அணி  நிர்வாகம்,

‘ரோஹித் சர்மாவின் ஒப்பற்ற தலைமைக்கு  நன்றி. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் மும்பை அணிக்கு  கேப்டனாக அவரது பங்களிப்பு அசாதாரணமானது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றியைக் குவித்தது மட்டுமில்லாமல் ஐபிஎல் வரலாற்றில் சிறந்த  கேப்டனாகவும் அவர் இடம்பிடித்துள்ளார்’ என்று தெரிவித்தது.

இந்த நிலையில், மும்பை அணி நிர்காகத்தின் முடிவு குறித்து ரோஹித் சர்மா இதுவரை எந்த ரியாக்சனும் கொடுக்கவில்லை. ஆனால் சூர்யகுமார் முதற்கொண்டு அவரது ரசிகர்கள் பலராலும் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில், இன்று சமூக வலைதளங்களில் ரோஹித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸின் ஜெர்சியை அணிந்துகொண்டு இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒருவேளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா செல்கிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.