வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 19 டிசம்பர் 2023 (08:44 IST)

சப்பாத்தி நல்லதுன்னு சொல்வாங்க.. நம்பாதீங்க?! – ரவிச்சந்திரன் அஸ்வின் அட்வைஸ்!

Ashwin
பெரும்பாலும் சர்க்கரை வியாதி உள்ளவர்கள், டயட் இருப்பவர்களுக்கு சப்பாத்தி உள்ளிட்ட கோதுமை உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. உணவு கட்டுப்பாடு என்றாலே பெரும்பாலும் அரிசி உணவுகளை தவிர்த்து சப்பாத்தி உள்ளிட்ட கோதுமை உணவுகளை எடுத்துக் கொள்ள சொல்வது இயல்பாகவே இருந்து வருகிறது.



இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சப்பாத்தி சாப்பிட்டதால் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது பெயரிலேயே யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். பெரும்பாலும் கிரிக்கெட் தொடர்பாகவும், தனது பயணங்கள் தொடர்பாகவும் பேசி வரும் அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் உணவு கட்டுப்பாடு குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் “சின்ன வயசுல நான் கிரிக்கெட் விளையாட தொடங்கியபோது உடலை மேம்படுத்த டயட் இருக்க தொடங்கியபோது டாக்டர்கள் முதல் பெரும்பாலானவர்கள் கொடுத்த அறிவுரை, அரிசி சாதம் சாப்பிட வேண்டாம். சப்பாத்தி, பருப்பு, ரோட்டி இது மாதிரி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். என் வாழ்க்கையில் நான் செஞ்ச பெரிய தப்பு அதுதான். ஒரு 30 வயசு வரைக்குமே அதை நான் உணரவில்லை.

பாலில் உள்ள லாக்டோன், கோதுமை பொருட்களில் உள்ள க்ளூட்டன் ஆகியவை உடல் எடையை குறைக்க உதவாது. மாறாக உடல் எடையைதான் அதிகரிக்கும். அதனால் நீங்கள் ஜிம்முக்கு சென்று வொர்க் அவுட் செய்தாலும் இவற்றை சாப்பிடுவதால் உடல் எடையை இழக்க முடியாது” என்று கூறியுள்ளார். அதனால் இவற்றை டயட் உணவாக எண்ணி அதிகம் சாப்பிடுவதால் எந்த பயனும் விளையாது என அவர் கூறியுள்ளார்.

Edit by Prasanth.K