1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Sunil gavaskar referring K L rahul for test championship final

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ராகுலை கீப்பராக இறக்கவேண்டும்… கவாஸ்கர் கருத்து!

கே எல் ராகுல்
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும் துணைக் கேப்டனுமான இருந்த கே எல் ராகுல் மீது கடும் விமர்சனங்கள் எழும் அளவுக்கு அவரின் பார்ம் இருந்தது. கிட்டத்தட்ட 47 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள அவர் சராசரியாக 33 மட்டுமே வைத்துள்ளார். இந்திய தொடக்க ஆட்டக்காரர்களில் இந்தளவுக்குக் குறைவான சராசரி யாருக்கும் இல்லை. இதையடுத்து ஆஸி தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதில் அணியில் இணைந்த சுப்மன் கில் சதமடித்து தன்னுடைய இடத்தை உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் இந்தியா, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் ஆஸி அணியை எதிர்கொள்கிறது. அந்த போட்டியில் கே எல் ராகுலை தொடக்க ஆட்டக்காரராக இல்லாமல் விக்கெட் கீப்பர் மற்றும் நடுவரிசை பேட்ஸ்மேனாகக் களமிறக்க வேண்டும் என முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் ராகுல் சதமடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
நாயகன் மீண்டும் வறார்… டெல்லி அணி கேப்டனாக டேவிட் வார்னர்!