திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 மார்ச் 2023 (12:56 IST)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்: இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி..!

India Test
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. 
 
உலக டெஸ்ட் சாம்பியன் தொடர் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே இந்த தொடரின் இறுதி போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றுவிட்டது. இதனை அடுத்து ஆஸ்திரேலியா அணியுடன் மோதும் அணி எது என்பது குறித்த கேள்வி எழுந்தது 
 
இந்தியா இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளில் ஒன்று இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது . இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா இரண்டு போட்டிகளில் வென்றதால் இறுதி போட்டிக்கு தகுதி பெரும் என்று எதிர்பார்க்கப்பட்டது 
 
ஆனால் அதே நேரத்தில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தொடரில் இலங்கை அணி வென்றால் இலங்கை இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்றும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வென்றதை அடுத்து இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதாக ஐசிஐசி அறிவித்துள்ளது.
 
 
Edited by Mahendran