1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 20 அக்டோபர் 2022 (09:32 IST)

ரிஷப் பண்ட்ட வச்சிகிட்டு அவர இறக்காம இருக்கக் கூடாது… கவாஸ்கர் சொல்லும் காரணம்!

இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் முதல் ஐந்து பேர் வலதுகை பேட்ஸ்மேன்களாக இருப்பது ஒரு குறையாக பார்க்கப்படுகிறது.

உலகக்கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இந்தியா பாகிஸ்தான் போட்டி அமைந்துள்ளது. இந்த போட்டிககான டிக்கெட் விற்பனை ஆரம்பித்த சில மணிநேரங்களிலேயே விற்றுத் தீர்ந்தது. இந்த போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான ஆடும் லெவன் அணியை ஏற்கனவே தீர்மானித்து விட்டதாக கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆடும் லெவனில் ஆறாவது வீரராக யார் களமிறங்குவார்கள் என்பதுதான் இந்திய அணியில் கேள்விக்குறியாக உள்ளது. இதற்காக ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இடையே போட்டி நிலவுகிறது. இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா “இந்திய அணியில் முதல் 5 பேட்ஸ்மேன்களில் இடது கை ஆட்டக்காரரே இல்லை. அதனால் பண்ட் அணியில் இருந்தால் அது மிகவும் உதவியாக இருக்கும்” என அவர் கூறியுள்ளார்.

இப்போது இதே கருத்தை இந்தியாவின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். அவர் “அனைத்து பேட்ஸ்மேன்களும் வலது கை பேட்ஸ்மேன்களாக இருந்தால் பவுலர்களுக்கும், எதிரணி கேப்டனுக்கும் எளிதாக அமைந்துவிடும். இடது கை பேட்ஸ்மேன் இருந்தால்தான் அவர்கள் பீல்டர்களை நிறுத்த குழம்புவார்கள்” எனக் கூறியுள்ளார்.