வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 19 அக்டோபர் 2022 (14:56 IST)

கைவிடப்பட்டது இந்தியா-நியூசிலாந்து பயிற்சி ஆட்டம்: என்ன காரணம்?

Cricket
உலக கோப்பை டி20 போட்டிக்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற இருந்தது இந்த போட்டிக்கான பணிகள் அனைத்தும் தயாராக இருந்த நிலையில் மழை காரணமாக பயிற்சி ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இன்றைய போட்டி நடைபெறுவதாக இருந்த மெல்போர்ன் மைதானத்தில் நல்ல மழை பெய்ததை அடுத்து இந்த போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர் 
 
ஏற்கனவே நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலை எதிர்வரும் ஞாயிறன்று இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. அதேபோல் இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறுவதும் சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது
 
Edited by Siva