1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (09:00 IST)

சன் ரைசர்ஸ் அணியின் புதிய பயிற்சியாளர் இவர்தான்!

ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து விளையாடி வரும் அணிகளில் ஒன்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி. முதலில் டெக்கான் சார்ஜர்ஸ் என்ற பெயரில் விளையாடிய இந்த அணி 2009 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது.

அதன் பிறகு எந்த ஒரு முறையும் ப்ளே ஆஃப் கூட செல்லாமல் போராடி வருகிறது. இதனால் பல வீரர்கள், பல கேப்டன்களை மாற்றியுள்ளது அந்த அணி, இந்நிலையில் இப்போது அந்த அணியின் புதிய பயிற்சியாளராக நியுசிலாந்து அணியின் முன்னாள் வீரர் டெனியல் வெட்டோரி நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு முதல் அவர் சன் ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளராக பணியைத் தொடங்கவுள்ளார். வெட்டோரி ஏற்கனவே ஐபிஎல் தொடரில் ஆர் சி பி அணிக்காக விளையாடி, அந்த அணிக்குக் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.