வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (19:30 IST)

ரஜினி ரசிகர் என்பதை மீண்டும் நிரூபித்த நடிகர் தனுஷ்!

rajini, dhanush
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ். இவர், வாத்தி படத்திற்குப் பின்  நடித்து வரும் படம் கேப்டன் மில்லர். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். இப்படத்தில் தனுஷுடன்  இணைந்து பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், நிவேதிதா சதீஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி ரிலீசாகும் என தகவல் வெளியாகிறது.

இப்படத்தை தனுஷின் 50 வது படத்தை அவரே இயக்கி  நடிக்கவுள்ளார்.  இதையடுத்தது, தனுஷின் 51வது படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கவுள்ளார்.

இந்த நிலையில், ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும்  இப்படத்தைப் பார்க்க ஆர்வமுடன் உள்ளனர்.
dhnush

இந்த நிலையில், நடிகர் தனுஷும் ஜெயிலர் படத்தைப் பார்க்க ஆர்வமுடன் இருப்பதை குறிக்கும் வகையில் இன்று தனுஷ் தன் டுவிட்டர் பக்கத்தில், இந்த வாரம் ஜெயிலர் வாரம் என்று தெரிவித்துள்ளார்.

ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்தாண்டு இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

இந்த நிலையில் ரஜினியின் மீதான தனுஷின் பாசம் குறையவில்லை என ரசிகர்கள் தனுஷின் இந்த டுவிட் பற்றி கருத்து கூறி வருகின்றனர்.