வியாழன், 14 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 7 ஜனவரி 2019 (12:18 IST)

இளம் வீரர்களால் கிடைத்த வெற்றி! விராட் கோலி நெகிழ்ச்சி!

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடர் வென்றது மிகப் பெரிய வரலாற்று சாதனை’ - கேப்டன் விராட் கோலி பெருமிதம்..!


 
சொந்த மண்ணில் விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 31 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பாலோ ஆன் பெற்றுள்ளது. 
 
ஆஸ்திரேலியா 300 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி இந்த அவமானத்தை சந்தித்தது. முன்னதாக, 1988ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக சிட்னி மைதானத்தில் நடந்த  டெஸ்டில் ஆஸி. அணி பாலோ ஆன் பெற்றிருந்தது.

சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 172 டெஸ்ட் போட்டிகளில் பாலோ ஆன் பெறாமல் இருந்து வந்த ஆஸி., கோஹ்லி தலைமையிலான இந்திய அணியிடம் அந்த பெருமையை  பறிகொடுத்தது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பாலோ ஆன் கொடுப்பது இது 4வது முறையாகும். இதற்கு முன் 1986ல் சிட்னியில் நடந்த டெஸ்டிலும், 1979-80ல் இந்தியாவில் நடந்த தொடரில் டெல்லி மற்றும் மும்பை டெஸ்டிலும்  பாலோ ஆன் கொடுத்துள்ளது.
 
ஆஸ்திரேலிய கிரிக்கெட் டெஸ்ட் தொடரை, 2 - 1 என்ற கணக்கில் வென்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம், ஆஸ்திரேலிய மண்ணில், இதுவரை இந்தியா மட்டுமல்லாது, ஆசியாவை சேர்ந்த எந்த ஒரு அணியின் கேப்டனும் செய்யாத சாதனையை படைத்துள்ளார், இந்திய கேப்டன் விராட் கோலி. 
 
இந்நிலையில் இந்த வெற்றி குறித்து, கேப்டன் கோலி கூறியதாவது:
 
இளம் வீரர்களின் அசாத்திய திறமையால் இந்த வெற்றி கிட்டியுள்ளது. எவரும் சாதிக்காததை நாங்கள் சாதித்துள்ளோம். இது போன்ற திறமையான வீரர்களை வழிநடத்தியதில் பெருமை அடைகிறேன். 
 
கேப்டன் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஒரு நாள் போட்டியில் உலக கோப்பை வென்றபோது, வயதில் நான் மிகவும் சிறியவனாக இருந்தேன். மூத்த வீரர்கள் பலரும் அப்போது உணர்ச்சிவசத்துடன் காணப்பட்டனர்.
 
அவர்கள் அன்று ஏன் அப்படி இருந்தார்கள் என்பதை தற்போது என்னால் உணர முடிகிறது. என் வாழ்நாளில் செய்த மிகப் பெரிய சாதனையாகவும், மிகச் சிறந்த வெற்றியாகவும் இதை கருதுகிறேன். 
 
நம் அணியில் மிகவும் இளம் வயதுடைய வீரர்கள் இருப்பதால், இந்த வெற்றி, எதிர்காலத்தில் அணியை மேலும் உயரத்திற்கு எடுத்துச் செல்ல உதவும். இந்திய கிரிக்கெட் வரலாற்றில், இது ஒரு மைல்கல் என்றால் அது மிகையாகாது என்று கோலி நெகிழ்ச்சியுடன் கூறினார்.