தம்மாத்துண்டு ஆங்க்கர் புஜாரா! – சாதனைத் தொடரின் நாயகன்…

Last Modified திங்கள், 7 ஜனவரி 2019 (10:50 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றுத் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

கடநத 1947-ம் ஆண்டு முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்தது. அதையடுத்து 70 ஆண்டு காலமாக அவ்வபோது இந்திய அணி சென்று விளையாடி வருகிறது. ஆனால் இந்திய அணி அங்கு ஒருமுறை கூட ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. கவாஸ்கர்,கபில்தேவ், கங்குலி, தோனி என எத்தனையோ தகுதி வாய்ந்த கேப்டன்கள் தலைமையில் சென்றாலும் தொடர் வெற்றி என்பது 71 ஆண்டுகளாக சாத்தியமில்லாமலே இருந்தது. இத்தனை ஆண்டுகால அவப்பெயரை கோஹ்லி தலைமையிலான இளம் வீரர்கள் படை சாதித்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவை அதன் மண்ணில் வீழ்த்திய ஆசியாவின் முதல் அணி எனும் பெருமையை கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சாதித்துள்ளது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு முழுமுதல் காரணம் அணியின் கூட்டு முயற்சிதான் என்றாலும். பேட்டிங்கில் தனி வீரனாக நங்கூரம் பாய்ச்சி அணியைத் தாங்கிப் பிடித்து வெற்றியைக்கனியைப் பறித்து தந்தது புஜாரா தான் எனறால் அது மிகையாகாது.


முதல் டெஸ்ட் போட்டியில் கோஹ்லி உடபட முன்வரிசை வீரரகள் அவுட ஆகி ஏமாற்றம் அளித்தாலும், பின்வரிசை வீரர்களின் துணைட்யோடு அணியை மீட்க போராடி சதம் அடித்ததில் இருந்து ஆரம்பித்தது இந்திய அணியின் வெற்றிக்கான சிறு பொறி. அந்த சிறுபொறியை ஊதிபெருக்கிப் பெரும் காட்டுத் தீயாக்கி இந்திய ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கினார் புஜாரா.

தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் மற்றும் சிட்னி டெஸ்ட் இரண்டிலும் சதம் அடித்து தன் கிரிக்கெட் வாழ்க்கையின் இதுநாள் வரையிலான சிறப்பான தொடராக இந்த ஆஸ்திரேலியாத் தொடரை மாற்றியுள்ளார்.

நான்குப் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் மொத்தமாக அவர் சேர்த்தது மட்டும் 527 ரன்கள். சந்தித்தது 1258 பந்துகள். வெளிநாட்டுத் தொடர் ஒன்றில் டிராவிட்டிற்கு அடுத்தபடியாக அதிகபந்துகள் சந்தித்தது மற்றும அதிக நேரம் களத்தில் நின்றது என இரண்டு சாதனைகளை இதன் மூலம் படைத்துள்ளார்.

மெல்போர்ன் டெஸ்ட்டில் 193 ரன்கள் சேர்த்து சிறப்பாக செயல்பட்ட அவருக்குத் தொடர் நாயகன் மற்றும் ஆட்டநாயகன் விருதுக் கிடைத்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :