30 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் ஃபாலோ-ஆன்: ஆஸ்திரேலியா பரிதாபம்

Last Modified ஞாயிறு, 6 ஜனவரி 2019 (10:32 IST)
இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி 30 ஆண்டுகளுக்கு பின்னர் சொந்த மண்ணில் ஃபாலோ ஆனை சந்தித்துள்ளது.

இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 622 ரன்கள் குவித்த நிலையில் இந்தியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணி 300 ரன்களில் முதல் இன்னிங்சில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து 322 ரன்கள் பின் தங்கியுள்ள நிலையில் ஃபாலோ ஆனை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 1988ஆம் ஆண்டு தான் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா ஃபாலோ ஆனை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி சற்றுமுன் வரை 4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது


இதில் மேலும் படிக்கவும் :