1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 7 ஜனவரி 2019 (09:10 IST)

சிட்னி டெஸ்ட்: போட்டி முடிவு அறிவிப்பு

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கடந்த 3ஆம் தேதி தொடங்கிய 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டிரா என நடுவர்கள் முடிவு அறிவித்துள்ளனர்.

சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 622 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி 300 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்த நிலையில் மழை மற்றும் போதுமான வெளிச்சம் இன்மையால் 2வது இன்னிங்ஸ் தாமதம் ஆனது.

இன்று காலை முதல் ஒரு பந்து  கூட வீசப்படாத நிலையில் இந்த போட்டி டிரா ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்றுமுன் போட்டியின் நடுவர்கள் இந்த போட்டி டிரா என அறிவித்தனர். இதனால் இந்திய அணியின் இன்னிங்ஸ் வெற்றி கனவு தகர்ந்தது.

இருப்பினும் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி 71 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.