சிட்னி டெஸ்ட்: இந்திய அணிக்கு பெரும் ஏமாற்றம்

Last Modified திங்கள், 7 ஜனவரி 2019 (06:07 IST)
சிட்னியில் நடைபெற்று வரும் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. ஆனால் இந்த வெற்றியை மோசமான வானிலை பறித்துஇவிடும் அபாயம் இருப்பதால் இந்திய அணிக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது.

வெளிச்சம் போதாத காரணத்தால் நேற்றே போட்டி நிறுத்தப்பட்ட நிலையில் அதே காரணத்தால் இந்திய நேரப்படி இன்று காலை 5 மணிக்கு தொடங்கவேண்டிய போட்டி இன்னும் தொடங்காமல் உள்ளது. இன்றைய போட்டியில் இன்னும் ஒரு பந்துகூட வீசப்படாமல் உள்ளதால் போட்டி டிரா அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.


போதுமான வெளிச்சம் கிடைத்து போட்டி தொடங்கினாலும், ஒருசில மணி நேரங்களில் பத்து விக்கெட்டுக்களை வீழ்த்துவது சாத்தியமில்லை என்பதால் இந்த டெஸ்ட் டிராவில் முடிவடையும் என்றே கருதப்படுகிறது. இருப்பினும் 30 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய அணியை ஃபாலோ ஆன் செய்ய செய்த ஒரே ஒரு திருப்தி மட்டும் இந்திய அணிக்கு இந்த போட்டியால் கிடைத்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :