ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (12:21 IST)

மூன்றாவது டெஸ்ட்டுக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்… ஆஸி. கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் தோற்று, பரிதாபகரமான நிலையில் இருக்கிறது ஆஸ்திரேலிய அணி. இந்நிலையில் இந்தூரில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்றால்தான் தொடரை இழக்காமல் இருக்க முடியும். இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பல மூத்த வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளதால ஆஸி. அணி மேலும் பலவீனமாகியுள்ளது. இந்நிலையில் குடும்ப சூழல் காரணமாக ஆஸி. அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸும் ஆஸிக்கு திரும்பியுள்ளார். அவரால் மூன்றாவது டெஸ்ட்டில் கலந்துகொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட்டுக்குக் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் அறிவிக்கப்பட்டுள்ளார். பால் டேம்பரிங் குற்றத்துக்காக கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அவர் இப்போது மீண்டும் கேப்டனாக செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.