வயசுலாம் ஒரு மேட்டரே இல்ல… ஐசிசி தரவரிசையில் சாதித்துக் காட்டிய ஆண்டர்சன்!
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வேகப்பந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார். 40 வய்திலும் டெஸ்ட் போட்டிகளில் ஆர்வமாக விளையாடி வரும் அவர் முடிந்தால் 50 வயது வரை விளையாடுவேன் என அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய அவர் தன் சொந்த மண்ணில் 100 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 200 போட்டிகளில் விளையாடிய சச்சின் கூட சொந்த மண்ணில் 94 போட்டிகளில் மட்டுமே விளையாடி இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் சச்சினின் சாதனையான 200 டெஸ்ட் போட்டிகள் என்ற சாதனையை அவர் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக பந்துவீசி வரும் ஆண்டர்சன் தற்போது ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதித்துள்ளார். இரண்டாம் இடத்தில் இந்தியாவின் அஸ்வின் உள்ளார். பேட் கம்மின்ஸ் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். 40 வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த சாதனையைப் படைக்கும் முதல் வீரராக ஆண்டர்சன் உருவாகியுள்ளார்.