வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 27 ஜனவரி 2022 (10:03 IST)

கோலிக்குப் பிறகு டெஸ்ட் அணிக்குக் கேப்டன் யார்? ஸ்டீவ் ஸ்மித் பதில்!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி சமீபத்தில் அந்த பொறுப்பில் இருந்து விலகினார்.

பிசிசிஐக்கும் இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு எழுந்து அதன் காரணமாக அவர் டி 20 மற்றும் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். ஒரு நாள் அணியின் கேப்டன் பொறுப்பு அவரிடம் இருந்து பிடுங்கப்பட்டது. இதுகுறித்த சர்ச்சைகள் ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருக்க, இப்போது டெஸ்ட் அணிக்கு யார் கேப்டன் என்பது குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த ஸ்டீவ் ஸ்மித் ‘ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் எனக்கு பிடித்தமானவர்கள்.’ என்று கூறியுள்ளார்.