ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: திங்கள், 29 மே 2023 (08:56 IST)

தோனி மீதான அன்பு புரிகிறது… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிஎஸ்கே கோச்!

மழை காரணமாக நேற்று நடைபெற இருந்த ஐபிஎல் இறுதிப் போட்டி இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் இறுதிப் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற இருந்தது. ஆனால் மழை காரணமாக டாஸ் கூட போட முடியாத நிலையில் இருந்தது. இரவு 10:00 மணி வரை பொறுத்து இருந்து பார்த்த நடுவர்கள் அதன்பின் ரிசர்வ் நாளான இன்று போட்டியை ஒத்தி வைப்பதாக அறிவித்தனர். 

இந்நிலையில் இந்த போட்டியைக் காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் மைதானத்துக்கு வந்து ஏமாந்து திரும்பினர். அதிலும் குறிப்பாக குஜராத்தில் போட்டி நடந்தாலும் சிஎஸ்கே அணிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் மஞ்சள் படையாக வந்து குழுமி இருந்தனர்.

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில் “இறுதிப் போட்டி வெகு தூரத்தில் இல்லை. தோனி மீதான உங்களின் அன்பு புரிகிறது. மைதானம் முழுவதும் மஞ்சள் நிறத்தைப் பார்ப்பது அற்புதமான அனுபவம்” எனக் கூறியுள்ளார்.