இன்றும் குஜராத்தில் மழை பெய்யுமா? – வானிலை ஆய்வு மையம் தகவல்!
நேற்று குஜராத்தில் பெய்த கனமழையால் ஐபிஎல் இறுதி போட்டி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்றும் மழை பெய்யுமா என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அரபிக்கடலை ஒட்டிய இந்திய மாநிலங்களான கேரளா, கோவா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வந்ததால் ஐபிஎல் இறுதி போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று மழை நிலவரம் குறித்து தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 3 அல்லது 4 மணி நேரத்தில் ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
குஜராத்தை பொறுத்த வரை அகமதாபாத்தில் மேகமூட்டமான சூழல் நிலவும் என்றும் மாலை நேரத்தில் ஆங்காங்கே சிறு தூரல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
Edit by Prasanth.K