1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 28 மே 2023 (19:16 IST)

அகமதாபாத் மைதானத்தில் மழை.. ஆடாமல் ஜெயிக்குமா குஜராத்?

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி என்று சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் நிலையில் அகமதாபாத் மைதானத்தில் மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே அகமதாபாத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்றைய போட்டியில் மழை காரணமாக தாமதமாக தொடங்கப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கப்பட்டால் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி தொடங்கும் என்றும் ஆனால் முழுமையாக மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டால் லீக் போட்டிகளில் அதிக புள்ளிகள் எடுத்த அணி என்ற வகையில் குஜராத் அணி சாம்பியன் பட்டம் பெற்று விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
எனவே வருண பகவான் இன்று மனது வைப்பாரா? அல்லது ஆடாமல் குஜராத் அணி வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva