திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 6 ஜூன் 2018 (13:49 IST)

இலங்கை- வெஸ்ட்இண்டீஸ் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

போர்ட் ஆப் ஸ்பெயினில் இலங்கை- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

 
 
வெஸ்ட்இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் போட்டி இன்று போர்ட் ஆப் ஸ்பெயினில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
 
தினேஷ் சண்டிமால் தலைமையிலான இலங்கை அணியும், ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணியும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மிகுந்த எதிர்பார்புகளுக்கு இடையே இன்று நடைபெறுகிறது.
 
இதுவரை வெஸ்ட்இண்டீஸ் மண்ணில் இலங்கை அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இதனால் இந்த தொடர் இலங்கை அணிக்கு மிகவும் முக்கியமான தொடராக கருதப்படுகிறது.