சரணடைந்தது பாகிஸ்தான்: தொடரை சமன் செய்தது இங்கிலாந்து

p
Last Modified திங்கள், 4 ஜூன் 2018 (16:12 IST)
பாகிஸ்தானுக்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 55 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
 
இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
 
இந்நிலையில் இந்த இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்து, முதலில் களமிறங்கி 174 ரன்களுக்கு அனைத்து வீக்கெட்டுகளையும் இழந்தது. அதிகப்பட்சமாக ஷாதாப் கான் 56 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன், விராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
இதையடுத்து, முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 363 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. அதிகப்பட்சமாக ஜாஸ் பட்லர் 80 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, 189 ரன்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணி 134 ரன்களுக்கு அனைத்து வீக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், டொமினிக் பெஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
 
இதன்மூலம் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.


இதில் மேலும் படிக்கவும் :