திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 1 ஜூன் 2018 (22:13 IST)

இங்கிலாந்து அபார பந்துவீச்சு: 174 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது பாகிஸ்தான் அணியின் ஷாதப் கான் 56 ரன்களும், ஹரிஷ் சோஹெல் 28 ரன்களும், ஆசாத் சபீக் 27 ரன்களும் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு தங்களுடைய விக்கெட்டுக்களை பறிகொடுத்ததால் பாகிஸ்தான் அணி 48.1 ஓவர்களில் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 
 
இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், பிராட், வோக்ஸ் தலா மூன்று விக்கெட்டுக்களையும், கர்ரான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
 
இந்த நிலையில் முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் இங்கிலாந்து அணி சற்றுமுன் வரை 25.2 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 76 ரன்கள் எடுத்துள்ளது.