வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 16 அக்டோபர் 2023 (07:40 IST)

முதல் வெற்றி யாருக்கு? இன்று இலங்கையோடு பலப்பரீட்சை நடத்தும் ஆஸ்திரேலியா!

உலகக் கோப்பை தொடர் தொடங்கி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவிடம் தோற்று புள்ளிப்பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள வாஜ்பாய் மைதானத்தில் இலங்கை அணியை எதிர்த்து விளையாடுகிறது. இலங்கையும் இன்னும் உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் இன்றைய போட்டியில் முதல் வெற்றியைப் பெற இரு அணிகளும் கடுமையாக மோதும் என்பதால் இன்றைய போட்டி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்கும்.