வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 16 அக்டோபர் 2023 (06:52 IST)

நடப்பு சாம்பியனை வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஆப்கானிஸ்தான்!

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த  போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி  49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழந்து 284 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரான ரமலானுல்லா அபாரமாக விளையாடி 80 ரன்கள் எடுத்தார். அதேபோல் இக்ரம் அலிகில் 58 ரன்கள் அடித்தார்.

இதனை அடுத்து 285 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 213 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நடப்பு உலக சாம்பியனான இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானிடம் தோற்றுள்ளதால் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது.

ஆரம்பம் முதலே ஆப்கானிஸ்தான் அணியின் பவுலர்களிடம் சரணடைந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் எவ்வளவோ முயன்றும் சறுக்கலில் இருந்து மீள முடியவில்லை. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட முஜீப் உர் ரஹ்மான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.