திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 13 டிசம்பர் 2023 (07:52 IST)

டக்வொர்த் லூயிஸ் விதிப்படி முதல் டி 20 போட்டியை வென்ற தென்னாப்பிரிக்கா!

இந்தியா- தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடந்த நிலையில் இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி தென்னாப்பிரிக்க வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரும் டக் அவுட்டாகி அதிர்சியளித்தனர். அதன் பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தனர். இந்திய அணியின் ஸ்கோர் 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ஆக .இருக்கும்போது மழை குறுக்கிட்டது.

இதன் பின்னர் தென்னாப்பிரிக்கா அணிக்கு இலக்காக 152 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.  13.5 ஓவர்களில் 5 விக்கெட்களை 154 ரன்கள் சேர்த்து தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.